என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பாஜக தலைவர் அமித் ஷா
நீங்கள் தேடியது "பாஜக தலைவர் அமித் ஷா"
டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் பாஜக தலைவர் அமித் ஷா பேசுகையில், மக்களவை தேர்தலில் டெல்லியின் ஏழு இடங்களிலும் பாஜக வெற்றி பெறும் என தெரிவித்துள்ளார். #AmitShah
புதுடெல்லி:
டெல்லியில் இன்று ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற பூர்வாஞ்சல் மகாகும்ப் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கு ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வரும் மக்களவை தேர்தலில் டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக நிச்சயம் வெற்றி பெறும்.
சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி பூர்வாஞ்சல் மக்களுக்கு தொடர்ந்து அநீதி இழைத்து வருகிறது
.
இதேபோல், டெல்லியில் வசிக்கும் மக்கள் சந்தோஷமாக உள்ளார்களா என்பதை முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிந்து வைத்துள்ளாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மெகா கூட்டணி வைக்கும் எதிர்க்கட்சிகளுக்கு நரேந்திர மோடியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என்பது மட்டுமே இலக்காக கொண்டுள்ளது. ஆனால், மோடியின் கொள்கைகள் நாட்டில் இருந்து வறுமை, பசிப்பிணி மற்றும் பாதுகாப்பின்மையை நீக்கியுள்ளது என தெரிவித்துள்ளார். #AmitShah
திமுக சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகள் பங்கேற்க உள்ளனர் என திமுக அறிவித்துள்ளது. #DMK #Karunanidhi #AmitShah
சென்னை:
திமுக சார்பில் வரும் 30ம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு மாநில முதல் மந்திரிகள் உள்பட முக்கிய பிரமுகர்கள் பலர் பங்கேற்க உள்ளதாக திமுக அறிவித்திருந்தது.
இந்நிலையில், கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சியில் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்க உள்ளார் என திமுக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக சார்பில் சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 30-ம் தேதி கருணாநிதியின் புகழுக்கு வணக்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சியில், பாஜக தேசிய தலைவர் அமித் ஷா பங்கேற்கிறார். மேலும், பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமார், ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு மற்றும் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பலர் பங்கேற்க உள்ளனர் என அறிவித்துள்ளது. #DMK #Karunanidhi #AmitShah
கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #AmitShah
கொல்கத்தா:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது. #BJP #AmitShah
அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இந்நிலையில், கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே, மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah
மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah
புதுடெல்லி:
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
இதற்கிடையே, நேற்று முன்தினம் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான அறிக்கை வெளியானது. இது குறித்து மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த அறிக்கையால் உள்நாட்டு போர் வெடிக்கும் எனக்கூறி அதிர்ச்சி அளித்தார். இதுதொடர்பாக பாஜக தலைவர்களை கடுமையாக சாடினார்.
இந்நிலையில், மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் வரும் 11-ம் தேதி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்க செல்லவுள்ளேன். மாநில அரசு அனுமதி தராவிட்டாலும் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். #AmitShah
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X